செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மே 2024 (08:29 IST)

“எதுக்கு நான்கு ஸ்பின்னர்ஸ்… கும்பல்ல கோயிந்தா போடவா?”- இந்திய டி 20 உலகக் கோப்பை அணியை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்தர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜாஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணி குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “இந்திய அணியில் எப்படி ஸ்ரீகாந்தை விட்டார்கள் என்றே தெரியவில்லை.  ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ரிங்கு சிங்கை எடுத்திருக்கலாம்.  அவரை எடுக்காதது மிகப்பெரிய அநியாயம்.  அணியில் எதற்காக நான்கு ஸ்பின்னர்கள். கும்பலில் கோயிந்தா போடவா? ரிங்கு சிங் பலி ஆடு ஆக்கப்பட்டுள்ளார். அதே போல ரன்களை வாரி வழங்கும் சிராஜுக்கு பதில் நடராஜனை எடுத்திருக்கலாம். ஷுப்மன் கில்லுக்கு பதிலாக ருத்துராஜை ரிசர்வ் வீரராக வைத்திருக்கலாம்.” என கொந்தளித்துள்ளார்.