வியாழன், 15 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 24 ஏப்ரல் 2025 (13:44 IST)

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனாலும் ‘எந்தப் பயனும் இல்லை’ என ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

சி எஸ் கே அணியில் ஒருவர் கூட தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அதில் பெரியளவில் ஏமாற்றம் அளித்தது 10 ஆண்டுகளுக்குப் பிறகு சி எஸ் கே அணிக்குத் திரும்பியுள்ள அஸ்வின்தான். அவர் இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தீவிர சி எஸ் கே ஆதரவாளருமான ஸ்ரீகாந்த் அஸ்வினைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் “அஸ்வின் அணியில் என்னதான் செய்துகொண்டிருக்கிறார். அவர் விக்கெட்கள் வீழ்த்தும் முனைப்போடு ஆடுவதில்லை. அவர் நான்கு ஓவர்கள் வீசிவிட்டால் போதும் என்ற safe ஆக விளையாடுகிறார்.” எனக் கூறியுள்ளார்.