வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (09:42 IST)

தோல்வியிலும் இப்படி ஒரு ஆறுதல்!... பாபர் ஆசமின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்

இந்திய அணியில் மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவாகி வருகிறார் ஷுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுப்மன் கில் இப்போது இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரராக உள்ளார். இந்நிலையில் அவர் இந்திய அணியின் எதிர்காலமாக இருப்பார் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். சச்சின், கோலி என்ற இந்திய லெஜண்ட்கள் பாரம்பர்யத்தில் அடுத்த வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இவர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் பாபர் ஆசமைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு சென்றுள்ளார்.

கில், 26 இன்னிங்ஸ்களில் 1352 ரன்கள் சேர்த்திருக்க, பாபர் ஆசம் 1322 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.