திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (09:27 IST)

பஞ்சாப் அணிக்குக் கேப்டன் ஆகும் ஷிகார் தவான்?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். இத்தனைக்கும் அவர் மோசமான பார்மில் இல்லை.ஆனால் அவரை விட பல இளைஞர்கள் சிறப்பாக விளையாடி அந்த இடத்துக்காக காத்திருக்கின்றனர்.

டி 20 போட்டிகளை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக எடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடிய அவர், அடுத்த ஆண்டு அந்த அணிக்கு கேப்டன் ஆக உள்ளார். இந்த முடிவை சமீபத்தில் நடந்த அந்த அணியின் ப்ரான்ச்சைஸ் கூட்டத்தில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் தவான், சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்துள்ளார். ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது கோப்பையும் வென்றுள்ளார்.