புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:53 IST)

எல.. ஆரஞ்சு கேப் வாங்கிட்டோம்ல..! – உற்சாகமாய் போஸ் கொடுத்த ஷிகார் தவான்!

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஷிகர் தவான் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை பெற்றுள்ளார்.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி உற்சாகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 422 ரன்கள் விளாசி அதிக ரன்கள் எடுத்தவராக சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவருக்கு ஆரஞ்சு வண்ண தொப்பி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை உற்சாகமாக அணிந்து அவர் கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.