வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (08:10 IST)

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர். இதற்கிடையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சானியா மிர்சா சோயிப் மாலிக்கை பிரிந்தார்.

மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனேயே சானியா மிர்சா இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக திடீரென ஒரு தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி என அப்போது மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது மீண்டும் அந்த வதந்தி பரவவே, சானியா மிர்சாவின் தந்தை இதற்குப் பதிலளித்துள்ளார். அதில் “சானியா இதுவரை ஒருமுறை கூட முகமது ஷமியைப் பார்த்ததில்லை. இந்த தகவல் முட்டாள்தனமானது.” எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.