வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (10:57 IST)

நீங்க ஐபிஎல் டீம் வாங்குனா.. நாங்க எல்பிஎல் டீம் வாங்குவோம்! – சல்மான்கானின் கிரிக்கெட் டீம்!

பிசிசிஐ இந்திய பிரீமியர் லீக் நடத்துவது போல இலங்கையில் நடத்தப்படும் லங்கா ப்ரீமியர் லீக் போட்டிக்கான அணி ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் சல்மான்கான்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் இந்திய ப்ரீமியர் லீக் டி20 ஆட்டங்கள் உலக அளவில் பிரசித்து பெற்றுள்ள நிலையில் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் டி20 போட்டிகளை தொடங்கி வருகின்றன. முன்னதாக ஐபிஎல்லை இலங்கையில் நடத்திக் கொள்ள அழைப்பு விடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது லங்கா ப்ரீமியர் லீக் என்ற பெயரில் டி20 போட்டிகளை நடத்த உள்ளது.

ஐபிஎல்லில் உள்ள அணிகளில் பல ஷாரூக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற சினிமா பிரபலங்கள் வாங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் நடக்கும் எல்பிஎல் டி20 போட்டி அணி ஒன்றை இந்தி நடிகர் சல்மான்கான் வாங்கியுள்ளார். ”கண்டி டஸ்கெர்ஸ்” என்ற அந்த அணியினை சல்மான் குடும்பம் வாங்கியுள்ளது.