1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 15 மார்ச் 2025 (08:36 IST)

நம்மிடம் இருப்பதே ஒரே ஒரு ஸ்டார்… ஏன் இப்படி பண்றீங்க? – பாக். முன்னாள் வீரர் ஆதங்கம்!

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி இருந்து லீக் போட்டிகளிலேயே தொடரை விட்டு வெளியேறியது . அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதால் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காமல் தொடரை விட்டு வெளியேறியது.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. பாகிஸ்தான் அணியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் இந்திய முன்னாள் வீரர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு முன்னாள் வீரர்களே பாகிஸ்தான் அணியைக் கண்டித்தனர். பாகிஸ்தான் முன்னாள் வீரர்களோ கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் விரைவில் நியுசிலாந்து அணிக்கு எதிராக நடக்கவுள்ள டி 20 தொடரில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் வெளியேற்றப்பட்டு இளம் வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி பேசியுள்ள பாக் முன்னாள் வீரர் சயித் அஜ்மல் “நமது முன்னாள் வீரர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். எல்லோரும் பாபர் அசாமைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் இருப்பதே ஒரே ஒரு நட்சத்திரம். அவரையும் அணியில் சேர்க்காமல் அவமானப்படுத்தினால் எப்படி நம் அணி முன்னேறும்?” எனக் கேட்டுள்ளார்.