திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (11:26 IST)

கொரோனாவிலிருந்து மீண்ட சச்சின்; ப்ளாஸ்மா தானம் செய்வதாக தகவல்!

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ப்ளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் 90ஸ் கிட்ஸ் அத்தியாயத்தில் மறக்க முடியாத அத்தியாயத்தில் இருப்பவர். 2011 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற்ற சச்சின் தற்போதைய கிரிக்கெட் ஆட்டங்கள் குறித்த தனது கருத்துகளை அவ்வபோது தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிகிச்சை பெற்று நலமுடன் அவர் திரும்பிய நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட சச்சின் டெண்டுல்கர் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ப்ளாஸ்மா தானம் செய்ய இருப்பதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.