Daily Horoscope
✕

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

Written By vinoth
Updated: வெள்ளி, 20 ஜூன் 2025 (08:58 IST)
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வழக்கமாக இந்தியா இங்கிலாந்து தொடர் பட்டோடிக் கோப்பை என்று அழைக்கப்படும்.  ஆனால் தற்போது அந்த தொடருக்கு ‘டெண்டுல்கர்- ஆண்டர்சன்’ கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆண்டர்சன் சச்சின் பெயருடன் தன் பெயரும் சேர்ந்திருப்பது கௌரவமானது எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பட்டோடியின் பெயர் மாற்றப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள சச்சின் “இந்த தகவல் வெளியான போது நான் முதலில் பட்டோடி குடும்பத்தினரைதான் தொடர்பு கொண்டேன். இந்த தொடரில் பட்டோடி பெயர் நீடித்திருக்க என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறினேன். அதன் பின்னார் பிசிசிஐ, ஜெய்ஷா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் என்னுடைய யோசனையைத் தெரிவித்தேன். அவர்களும் அதையேற்று கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடியின் பெயரில் பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தனர்” எனக் கூறியுள்ளார்.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments