செவ்வாய், 11 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 11 மார்ச் 2025 (12:19 IST)

தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த போட்டி முடிந்ததும் மகிழ்ச்சியான முகத்தோடு ரோஹித் ஷர்மா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இது பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்து செல்லும்போது, அவர் சாம்பியன்ஸ் கோப்பையை அங்கேயே மறந்து வைத்து விட்டு சென்றார். இது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்துள்ளது. ரோஹித் ஷர்மா, தனது மறதிக்காகப் பெயர் பெற்றவர். டாஸ் போடப் போகும் போது அணியில் விளையாடும் வீரர்கள் பெயரைக் கூட அவர் சில நேரம் மறந்து முழித்துள்ளார். அதனால் ரோஹித்தின் இந்த செயல் ரசிகர்களால் செல்லமாக கேலி செய்யப்பட்டு வருகிறது.