மகளிர் ஐபிஎல்.. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கள்.. குஜராத்தை வீழ்த்திய மும்பை..!
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில், குஜராத் அணியை மும்பை அணி வீழ்த்தியது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடியது. கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.
கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ரன் அவுட் மூலம் விக்கெட் விழுந்தது. அதன் பிறகு இரண்டாவது பந்தியிலும் விக்கெட் விழுந்தது. மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் தலா ஒரு சிங்கிள் மட்டுமே குஜராத் அணியினர் எடுத்தனர். ஐந்தாவது பந்தில் எந்த ரன்களும் எடுக்கவில்லை. கடைசி பந்திலும் ஒரு விக்கெட்டை விழுந்தது. இதனால், குஜராத் அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், வெற்றி பெற்ற மும்பை அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அதே 10 புள்ளிகளுடன் டெல்லி அணி உள்ளது. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களில் முறையே குஜராத், உத்தரப்பிரதேசம், பெங்களூர் அணிகள் உள்ளன.
இன்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற உள்ளது. இதனால், இன்றுடன் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைகின்றன. இதனைத் தொடர்ந்து, வரும் 13ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும், 15ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva