செவ்வாய், 4 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 3 மார்ச் 2025 (09:42 IST)

போட்டிய எல்லாம் ஜெயிச்சுடுறோம்… ஆனா டாஸ்தான்… உலக சாதனைப் படைத்த ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இதன்மூலம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி 79 ரன்கள் சேர்த்ததால், மொத்தம் 249 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 45.2 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது.  வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த போட்டியில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸைத் தோற்றார். இது சர்வதேசப் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாகத் தோற்கும் 13 ஆவது டாஸ் ஆகும். இதன் மூலம் தொடர்ந்து அதிக முறை டாஸ் தோற்ற கேப்டன் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.