1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:42 IST)

தப்பிச்சா போதும்னு விளையாடாதீங்க… இளம் வீரர்களுக்கு ரோஹித் ஷர்மாவின் அட்வைஸ்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய பிளேயிங் லெவன் அணி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த போட்டிக்கு முன்னதாக நேற்று கேப்டன் ரோஹித் ஷர்மா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக பேசினார். அதில் “தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாகவும், நிதானமாகவும் விளையாட வேண்டும். தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் ஆடினால் நெருக்கடியைத்தான் சந்திக்க வேண்டும்.

அதனால் எந்த பந்துகளை அடிக்க வேண்டுமோ- எந்த ஷாட்களை அடித்தால் ரன்கள் கிடைக்குமோ அதை செய்ய வேண்டும். இந்த போட்டியில் கே எல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார். அவர் சவால்களை தானே விரும்பி ஏற்றுக்கொண்டு அதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறியுள்ளார்.