Daily Horoscope
✕

நான் பிட்ச்சை தவறாகக் கணித்துவிட்டேன்.. முழு தவறும் என்னுடையதுதான் – கேப்டன் ரோஹித் ஷர்மா!

Written By vinoth
Updated: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (08:11 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் டக் அவுட் ஆகி ஏமாற்றினர்.

இதனை அடுத்து, நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகின்றது. இந்திய அணியைப் போல தடுமாறாமல் நியுசிலாந்து வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது தவறான முடிவு என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இது சம்மந்தமாக “டாஸ் வென்றதும் ஆடுகளம் பேட் செய்ய ஏதுவாக ப்ளாட்டாக இருக்கும் என நினைத்து முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்துவிட்டேன். நான் ஆடுகளத்தைத் தவறாக கணித்துவிட்டேன். அது என்னுடைய தவறுதான்” எனக் கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

352 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை செய்த மே.இ.தீவுகள்.. தொடரை வென்றது இந்தியா...

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி.. பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் விலகல்.. மாற்று வீரர்கள் யார் யார்?

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை.. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியின் நாள்..

ஆசிய விளையாட்டு போட்டி.. வெறும் 45 ரன்களில் சுருண்ட இலங்கை.. இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments