Daily Horoscope

ரிஷப் பண்ட் அதிரடி… ஷுப்மன் கில் நிதானம்… சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி!

Written By vinoth
Updated: சனி, 2 நவம்பர் 2024 (11:31 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் மற்றும் புனேவில் நடந்த டெஸ்ட் போட்டிகளை வென்ற நியுசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

முதலில் நிதானமாக ஆடிய நியுசிலாந்து அணி இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேல் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரின் சுழல் தாக்குதலால நிலைகுலைந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா ஐந்து விக்கெட்களும், அக்ஸர் படேல் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து முதல் நாள் ஆட்டமுடிவின் போது இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதையடுத்து இரண்டாம் நாளில் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய பண்ட் 59 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஷுப்மன் கில் 70 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 195 ரன்கள் சேர்த்துள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments