திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 29 மே 2024 (08:48 IST)

“இப்போது நான் வாங்கும் சம்பளமே நான் எதிர்பார்க்காதது…”… ரிங்கு சிங் நெகிழ்ச்சி!

அடுத்த மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான்.

இதுபற்றி இப்போது விளக்கம் அளித்துள்ளார் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர். அதில் “ரிங்கு சிங் மேல் எந்த தவறும் இல்லை.  அவரை தேர்வு செய்யாதது எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக அமைந்தது. இரண்டு ஸ்பின்னர்கள் கூடுதலாக தேவை என ரோஹித் ஷர்மா சொன்னதால், அவரை ரிஸர்வ் வீரர்கள் பட்டியலில் வைக்கவேண்டிய சூழல் உருவானது.  அவர் 15 பேர் கொண்ட அணிக்கு மிகவும் நெருக்கமாகவே இருந்தார். அவரைப் போலவே ஷுப்மன் கில்லும் இருந்தார்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரிங்கு சிங் இன்னும் அதிகமாக கொண்டாடப்பட வேண்டும் அவருக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாகக் கிடைக்கவேண்டும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி பேசிய ரிங்கு சிங் “இப்போது நான் வாங்கும் 55 லட்சம் ரூபாய் சம்பளமே நான் எதிர்பார்க்காதது. சிறுவயதில் எனக்குத் தேவையானதை நான் சம்பாதித்துக் கொள்வேன். எனக்குப் பணத்தின் அருமை தெரியும். பணம் புகழ் எல்லாமே நிலையானது அல்ல. பிறக்கும் போது எதுவும் கொண்டுவருவதில்லை. போகும் போது எதுவும் கொண்டு செல்வதில்லை. அதனால் தன்னிலை அறிந்து தரையில் நடக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.