திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (19:19 IST)

டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு.. இன்னைக்கு எந்த ரெக்கார்டையும் உடைக்க முடியாது! – ப்ளேயிங் 11 அப்டேட்!

SRH vs RCB
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.



இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 1 போட்டியில் மட்டுமே வென்று கடைசி இடத்தில் உள்ளது. அதை விட ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான சம்பவம் இந்த சீசனில் ஆர்சிபி அணியின் அதிகபட்ச ஸ்கோர் ரெக்கார்டான 263 ரன்கள் சாதனை 4 முறை உடைக்கப்பட்டுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணி மட்டும் மூன்று முறை இந்த சாதனையை முறித்துள்ளது. மேலும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலேயே 284 ரன்களை அடித்து புதிய சாதனையையும் படைத்தது.

ஏற்கனவே சன்ரைசர்ஸிடம் தோல்வி அடைந்திருந்த ஆர்சிபி இன்று மீண்டும் அதே அணியுடன் மோதும் நிலையில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஒருவேளை பேட்டிங்கில் குறைவான ரன்கள் எடுத்தாலும் சன்ரைசர்ஸ் அணியால் அந்த குறைந்த ரன்களுக்கு மட்டுமே சேஸிங் செய்ய முடியும். முதல் பேட்டிங் கிடைக்காததால் இன்று எந்த ரெக்கார்டையும் சன்ரைசர்ஸ் உடைக்காது என ஆர்சிபி ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாப் டூ ப்ளெசிஸ், விராட் கோலி, வில் ஜாக்ஸ், ராஜட் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லம்ரோர், லோகி பர்குசன், கரண் சர்மா, முகமது சிராஜ், யஷ் தயால்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, எய்டன் மர்க்ரம், ஹெண்டிக் க்ளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், சபாஷ் அகமது, பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெயதேப் உனத்கட், மயங்க மர்கண்டெ, நடராஜன்

Edit by Prasanth.K