திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (10:48 IST)

இந்த ஐபிஎல்லில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட வீரர்? அணி? – தோற்றும் வென்ற ஆர்சிபி!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த சீசனில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஐபிஎல் அணி மற்றும் வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

2022 ஐபிஎல் சீசன் கடந்த ஏப்ரலில் தொடங்கி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டிகளில் இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும், புதிய அணியான குஜராத் டைட்டன்ஸும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல்லில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட வீரர்கள் குறித்த தரவரிசையில் அதிகம் ட்வீட் செய்யப்பட்டு ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சென்னை அணி கேப்டன் தோனியும், மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

அதுபோல அதிகம் ட்வீட் செய்யப்பட்ட அணிகளில் ரசிகர்கள் மனதை வென்ற ஆர்சிபி அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.