சேவாக் போல திறமையானவர் பிருத்வி ஷா – சொன்னது யார் தெரியுமா?

வெள்ளி, 10 ஜூலை 2020 (11:53 IST)
இந்திய அணியின் இளம் திறமையான வீரராக உருவாகி வரும் பிருத்வி ஷா சேவாக்குக்கு இணையாக வருவார் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் பிருத்வி ஷா. அதன் பிறகு அவர் பயன்படுத்திய சுவாசப் பிரச்சனைக்கான சிரப்பில் தடை செய்யப்பட்ட பொருள் இருப்பதாகக் கூறி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டார். தடை நீங்கி நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார்.

இந்நிலையில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் ரஞ்சி கோப்பை நாயகன் வாசிம் ஜாபர் பிருத்வி ஷாவின் திறமைக் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதில் ‘பிருத்வி ஷா சேவாக் போன்ற திறமையான தொடக்க ஆட்டக்காரராக வருவார். ஆனால் அவர் களத்துக்கு வெளியே தனது ஒழுக்கத்தைக் கடைபிடிக்கவேண்டும். அதே நேரத்தில் அவர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்’ என யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments