சென்னையை டார்கெட்டாக்கி மற்ற மாவட்டங்களை கோட்டை விட்ட எடப்பாடியார்?
சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரொனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல சென்னையில் ஒரே நாளில் 1,216 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், சென்னையில் ஒரு நாளில் 2,700 பேர் குணமடைந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000 கடந்தது. ஆம், சென்னையில் கொரோனாவில் இருந்து 52,287 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.
அதோடு சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு 20,271 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதேபோல சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 1,169 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரொனாவின் தாக்கம் கனிசமாக குறைந்து வந்தாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மதுரை, தேனி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்து சென்னையை போல இந்த மாவட்டங்களுக்கு தனி கவனம் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் அரசு உள்ளது.