இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?... ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிருப்தி!
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.
இதே போல ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று பிடிவாதமாக இருந்ததால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகின்றன. இந்த ஹைபிரிட் மாடலால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மற்ற அணிகள் பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்று ஆடி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஹைபிரிட் மாடல் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக அமைவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள “இந்திய அணி தனது எல்லாப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு சாதகமாக அமையும்” எனக் கூறியுள்ளார்.