ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:04 IST)

தோத்துடுவோம்னு நினைச்ச கொல்கத்தா.. மாஸ் காட்டிய பேட் கம்மின்ஸ்! – வாய் பிளந்த ரசிகர்கள்!

Pat Cummins
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி மும்பை அணியை வீழ்த்த பெரும் காரணமாக பேட் கம்மின்ஸ் விளங்கினார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்ந்தெடுத்த நிலையில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் 13 ஓவர்கள் வரை பெரிய முன்னேற்றம் இல்லாமல் 70+ ரன்களின் ஆடி வந்த மும்பை அணியின் ஸ்கோர் நிலவரம் சூர்யகுமார் யாதவ் வருகையால் சூடு பிடித்தது. திலக் வர்மாவும் பார்ட்னர்ஷிப்பில் இறங்க பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக மொத்த ஸ்கோர் 161 ஆக உயர்ந்தது.

162 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா 9 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி வந்தது. சில விக்கெட்டுகளை இழந்தாலும் வெங்கடேஷ் ஐயர் நின்று நிதானமாக விளையாடி ஒரு அரைசதத்தை வீழ்த்தினார். 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய பேட் கம்மிம்ஸ் மைதானத்தில் ஒரு ருத்ர தாண்டவத்தை ஆடினார். சரமாரியாக 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை அடித்து நொறுக்கி 14 பந்துகளில் அரைசதத்தை வீழ்த்தினார்.

முன்னதாக ஐபிஎல்லில் கே.எல்.ராகுல் 14 பந்துகளில் அரைசதம் வீழ்த்திய சாதனையை இதன்மூலம் கம்மின்ஸ் சமன் செய்துள்ளார். கம்மின்ஸின் அதிரடியால் 16 ஓவர்களிலேயே 162 ரன்களை ஈட்டி கொல்கத்தா வரலாற்று வெற்றியை பெற்றது.