மனைவி பற்றி எல்லை மீறி கமெண்ட் அடித்த ரசிகர்… கூலாக பதிலளித்த பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரை அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதனால் அவர் மீது கிரிக்கெட் உலகின் கவனம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் அவர் தன் மனைவியுடன் சர்ஃபிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்த ஒரு குறும்புக்கார ரசிகர், “நான் உங்கள் மனைவியை காதலிக்கிறேன் என எல்லை மீறி கமெண்ட் செய்தார். அவருக்கு பதிலளித்த கம்மின்ஸ் “சரி, நான் அதை அவரிடம் தெரிவித்து விடுகிறேன்” எனக் கூலாக பதிலளித்துள்ளார்.