1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (18:59 IST)

அதிக முறை ஆட்ட நாயகன் விருது : விராட் கோலியை மிஞ்சிய ஜிம்பாவே வீரர்

kohli, SikandarRaza
2023 ஆம் ஆண்டி நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை மிஞ்சியுள்ளார் ஜிம்பாவே வீரர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில், இந்தியாவைச் சேர்ந்த  விராட் கோலி, பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்.

சமீபத்தில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனையை முறியடித்து, 50 சதங்கள் அடித்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில்,  2023 ஆம் ஆண்டி நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருத் வென்ற வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை(6 முறை) பின்னுக்குத் தள்ளி ஜிம்பாவே வீரர் சிகந்தர் ராசா(7முறை) முதலிடம் பெற்றார்.

அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.