1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (17:44 IST)

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 2 வது வெற்றி

pakistan haider ali
வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி, முல்டன் நகரில் நேற்று நடந்தது.

இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.  இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து,  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 276 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன் களுக்கு ஆல் அவுட் ஆனது.

எனவே பாகிஸ்தான் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.