வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 13 மே 2023 (15:42 IST)

நான் கேப்டனாக இருந்த போது செய்த தவறுகள்- கோலியின் ஒப்புதல் வாக்குமூலம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி, மூன்று வடிவிலான போட்டிகளிலும் அசாதாரணமாக ரன்களைக் குவித்து வருபவர். அதனால் அவரை ரன் மெஷின் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் ஆக்ரோஷமான இளம் வீரராக அறிமுகம் ஆகி, தனது அசுரத்தனமான ஃபார்மால் இன்று உலகின் தலைசிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் கோலி.

கடந்த ஆண்டுக்கு முன்னர் அவர் இந்திய அணியின் கேப்டன் பதவி மற்றும் ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணியின் கேப்டன் பதவி என அனைத்தையும் துறந்தார். இப்போது இழந்த தன்னுடைய ஃபார்மை மீட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது தன்னுடைய கேப்டன்சி காலம் பற்றி பேசியுள்ள அவர் “நான் கேப்டனாக இருந்த போது தவறுகள் செய்துள்ளேன். ஆனால் அந்த தவறுகள் எதுவும் சுயநலமானவை இல்லை. அணியை முன்னோக்கி எடுத்து செல்வதற்கானதுதான்” எனக் கூறியுள்ளார்.