டக் அவுட் ஆன கோலி.. இழுபறியில் இறுதி டெஸ்ட்! – சாதிக்குமா இந்தியா!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இறுதி டெஸ்ட் நடந்து வரும் நிலையில் இந்தியா 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற வகையில் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில் இன்று இறுதி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் தொடங்கி நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 75 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது விளையாட தொடங்கியுள்ள இந்திய அணி 38 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களே எடுத்துள்ளது. அணி கேப்டன் விராட் கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றால் தொடரை ட்ரா செய்யலாம் என்பதால் தீவிரம் காட்டி வருகிறது.