ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:18 IST)

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட கைரன் பொல்லார்டு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் கைரன் பொல்லார்டு. அந்த அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். பலமுறை இக்கட்டான நிலைமையில் இறங்கி அணியை வெற்றிப் பெற செய்துள்ளார். அந்த அணிக்காக 12 ஆண்டுகளாக அவர் விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு மெஹா ஏலத்தில் இவரை தக்க வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இவர் முன்பு போல சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. இதனால் விரைவில் நடக்க உள்ள மினி ஏலத்துக்காக அவர் உள்பட 5 வீரர்களை தற்போது விடுவித்துள்ளது.

ஆனால் இப்போது மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பொல்லார்டு இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங் கோச்சாக செயல்பட உள்ளார் என்று சொல்லப்படுகிறது