புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜூன் 2020 (09:33 IST)

என்ன பண்ணுனா ஐபிஎல் நடத்த முடியும்! – கவாஸ்க்கர் கருத்து!

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமல் உள்ள சூழலில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து பேசிய அவர் ”இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் அக்டோபரில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சாத்தியப்படாது. அடுத்த மாதம் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையே மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் போட்டிகள் நடைபெற உள்ளது. அதை வைத்து கிரிக்கெட் போட்டியை மறுபடியும் தொடங்குவது குறித்து மதிப்பீடு செய்யலாம்.

ஸ்டேடியத்திற்குள் குறைந்த ஆட்களை வைத்து கிரிக்கெட் நடத்த ஆஸ்திரேலியா முயற்சித்து வருகிறது. அது சாத்தியமானால் அங்கு உலக டி20 போட்டிகள் நடக்கலாம். உலக டி20 போட்டிகள் தொடங்கினால் அது ஐபிஎல் போட்டிகளை பாதிக்கும். எனவே செப்டம்பரில் இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம். போட்டிகளை குறைத்து புதிய அட்டவணையை உருவாக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளார்.