இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!
சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த போட்டியில் ஷிவம் துபே பேட் செய்யும் போது 20 ஆவது ஓவரில் பந்து அவர் ஹெல்மெட்டில் தாக்கியதால் அவருக்கு கன்கஷன் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கன்கஷன் மாற்று வீரராக அவருக்குப் பதில் ஹர்ஷித் ராணா ஆட்டத்தில் இணைந்தார்.
ஒரு வீரருக்குக் கன்கஷன் ஏற்பட்டு அவருக்குப் பதில் மாற்று வீரரை இறக்கினால் அவருக்கு சமமான மாற்றுவீரரைதான் இறக்க வேண்டும் என்பது ஐசிசி விதி. ஆனால் துபேவுக்கு எந்தவிதத்திலும் சமமானவர்களாக இல்லாத ஹர்ஷித் ராணாவை இறக்கியது சரியல்ல எனக் கருத்துகள் எழுந்தன. இது பற்றி இங்கிலந்து கேப்டன் பட்லரும் அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் டாஸ் போடும் போது பட்லர் இதைக் குறித்து கேலி செய்யும் விதமாகப் பேசினார். அவர் “இன்றைய போட்டியில் எங்கள் அணியின் 4 இம்பேக்ட் மாற்றுவீரர்கள் உள்ளார்கள். ரெஹான் அகமது, சஹீப் மஹ்முத், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்ஸன் ஆகியோர் எனப் பேசினார். இது மீமாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகளாகவும் வைரல் ஆகி வருகிறது.