ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?
ஐபிஎல் மெஹா ஏலத்துக்கு அணிகளும் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். பதிவு செய்த வீரர்களில் 574 வீரர்களை மட்டும் ஏலத்துக்குத் தயார் செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். நாளை துபாயின் ஜெட்டா நகரில் இந்த ஏலம் நடக்கவுள்ளது.
முன்னணி வீரர்கள் இரண்டு செட்களாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட உள்ளன. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வயதான வீரராகவும் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வீரராகவும் உள்ளனர்.
இந்நிலையில் இப்போது ஏலப் பட்டியலில் கடைசி நேரத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர், நேத்ராவால்கர் மற்றும் ஹர்ஷித் தாமோதர் ஆகியோர் இணைக்கப்பட்டு பட்டியலில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 577 ஆக உயர்ந்துள்ளது.