திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2023 (08:15 IST)

உலகத்துல இப்படி ஒரு வாட்டர் பாய பாக்க முடியாது… இஷான் கிஷானின் வைரலாகும் புகைப்படம்!

நேற்று நடந்த உலகக் கோப்பையின் இறுதி லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும் அடித்தனர், ஸ்ரேயாஷ் அய்யர் தீபாவளிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி மாதிரி நெதர்லாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து துவம் செய்தார்.  அவர் 94 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து அசத்தினர். இதில், 5 சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் அடக்கம். கே எல் ராகுலும் 64 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்து சாதனைப் படைத்தனர்.

இந்த போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்யும் போது வாட்டர் பாயாக வந்த இஷான் கிஷான் செய்த செயல் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாட்டர் பாயாக வந்த இஷான் கிஷான் கோலிக்கு தண்ணீர் கொடுக்காமல் தானே மைதானத்தில் நின்று குடித்தார். இது சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.