1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2025 (10:43 IST)

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா! - அவரே அளித்த பதில்!

தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ரோகித் சர்மா வெளியேறியுள்ள நிலையில் ஓய்வை அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தார். அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட நிலையில் 2 தோல்வி, 1 ட்ராவை இந்திய அணி சந்தித்தது. இதனால் இந்த கடைசி டெஸ்ட்டில் இருந்து ரோகித் சர்மா தானாக விலகியுள்ளார்.

 

இதனால் அணியை பும்ரா வழிநடத்தி வருகிறார். ரோஹித் சர்மா இந்த போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், விரைவில் அவர் டெஸ்ட் தொடரில் ஓய்வு அறிவிக்க இருப்பதாகவும், கிரிக்கெட் வாரிய மேலிடம் அவரை ஓய்வு அறிவிக்க சொல்லி அழுத்தம் தருவதாகவும் பேச்சுகள் வெளியாகியுள்ளது.
 

 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரோஹித் சர்மா “ஃபார்மில் இல்லாததால் விலகி இருக்கிறேனே தவிர ஓய்வு பெறவில்லை. இந்திய அணிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே யோசித்து முடிவு எடுக்கிறேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K