இர்ஃபான் பதான் கிரிக்கெட்டிலிருந்து விலகல்..
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் இர்ஃபான் பதான், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிர்க்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்ந்த இர்ஃபான் பதானுக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியே முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். அந்த போட்டியிலேயே அவரது பவுலிங் பெரிதும் பேசப்பட்டது.
தொடர்ந்து பல போட்டிகளில் பேட்ஸ்மேனாகவும் பவுலராகவும் சிறப்பாக விளையாடி தன்னுடைய தடத்தை பதித்த அவர் 2007 ஆம் டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தானுடனான போட்டியில் ஹாட் ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது ஆட்டத்தின் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் 35 வயதாகும் இர்ஃபான் பதான், தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.