இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும்- சல்மான்கான்

சனி, 18 நவம்பர் 2023 (13:37 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியையொட்டி  இந்திய ரசிகர்கள் இந்தியா ஜெயிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்  இந்திய அணி , நியூசிலாந்தை வீழ்த்தியது. எனவே வரவுள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நாளைய இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த  நிலையில்,  உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி.. நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..

உலகக்கோப்பை கால்பந்து தொடர்.. இன்று இறுதிப்போட்டி.. கோப்பையை வெல்வது அர்ஜெண்டினா? பிரேசில்?

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா: மெஸ்ஸியின் அசாத்திய ஆட்டம்!

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments