வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (23:47 IST)

இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது....

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது 186 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது.
இதில், இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் 177 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது.  ஆர்ச்சர் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் தாகூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  
 
தற்போது இந்தியா –இங்கிலாந்து தலா 2 போட்டிகளில் வெற்று சமநிலை பெற்றுள்ளது.  இறுதிப்போட்டி அகமதாபாத்தில் மார்ச் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.