Daily Horoscope
✕

“இப்போது இந்தியா எங்களை சாதாராணமாக நினைக்காது…” முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!

Written By vinoth
Updated: திங்கள், 17 அக்டோபர் 2022 (09:28 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது.

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்காக விளையாட உள்ள வீரர்கள் யார் என்பதை நான் இப்போதே தீர்மானித்து விட்டேன் என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மேலும் அவர் “வீரர்களிடம் கடைசி நிமிடத்தில் நீ விளையாட போகிறாய் என சொல்ல நான் விரும்பவில்லை. அனைத்து வீரர்களிடம் இதுகுறித்து நான் பேசிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் சல்மான் பட் “இப்போது உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல முடியாது என்ற பேச்செல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகளாகவே உள்ளன. அதனால் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக எடுத்துக் கொள்ளாது என நினைக்கிறேன்” எனத் தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசியுள்ளார்.

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments