வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 19 ஜனவரி 2022 (19:09 IST)

இந்தியாவுக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு !

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒரு  நாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில்  நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில், கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான  தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் ரன் சேர்க்க திணறினர். இதையடுத்து, டெம்பா –ராசி வான் ஜோடி இந்திய வீரர்களின் பந்துவீச்சை  நாலாப்பக்கமும் சிதறடித்தனர்.

எனவே இவ்விரு வீரர்களும் சதம் விளாசினர்.  இதனால் தென்னாப்பிரிக்க அணி 50  ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்து, இந்தியாவுக்கு 297 ரன்கள் இலக்காக  நிர்ணயித்துள்ளது.டெம்பா 110 ரன்களும், ராசி வான் டுசன் 129 ரனகள் எடுத்தனர்.