செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (11:53 IST)

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இந்த தொடரில் இந்திய அணி பல குடைச்சல்களை ஐசிசிக்குக் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐசிசி நடுவர் குழுவில் இருக்கும் நிதின் மேனன் மற்றும் போட்டி நடத்துனர் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் இந்த தொடரில் இந்திய நடுவர்கள் மற்றும் ரெஃப்ரீக்கள் யாரும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணிக்கு இந்த தொடருக்கு முன்பாகப் பயிற்சிப் போட்டிகள் எதுவும் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இந்திய அணிக்காக மற்ற அணிகளை துபாய்க்கு அனுப்பி திருப்பி அழைத்து வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்து தொடர் முடிந்ததும் இந்திய அணி பிப்ரவரி 15 ஆம் தேதி துபாய்க்கு செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது.