Daily Horoscope
✕

ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இந்தியா vs கனடா போட்டி!

Written By vinoth
Updated: சனி, 15 ஜூன் 2024 (22:50 IST)
நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில் நேற்று இந்திய அணி ஃப்ளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் கனடா அணியை எதிர்த்து விளையாட இருந்தது. இந்த போட்டி நடைபெறும் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டி மழை மற்றும் ஈரமான மைதானப்பரப்புக் காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இதன் மூலம் லீக் போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகள் நிறைவுக்கு வந்தன. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.

 

எல்லாம் காட்டு

ஓய்வு முடிவை அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி...

2027ஆம் ஆண்டின் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் அட்டவணை.. முதல் போட்டி யார் யாருக்கு?

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் திடீர் மழை.. இந்தியா வென்றது எப்படி?

இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. இந்திய பந்துவீச்சு அபாரம்...

கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஓய்வு அறிவிப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments