1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (08:47 IST)

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மாஸ் காட்டிய வார்னர்! – விருது வழங்கிய ஐசிசி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருக்கு இந்த மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் என ஐசிசி விருது வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் கடந்த சில ஆட்டங்களில் பேட்டிங் மோசமாக விளையாடியதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வந்தார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த வார்னர், கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணியிலிருந்தே விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் வார்னர். வார்னர் திறன் குறைந்துவிட்டது என நினைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறப்பாக விளையாடிய நிலையில் இந்த மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஐசிசி வார்னருக்கு அளித்து கௌரவித்துள்ளது.