புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (23:01 IST)

டெல்லி அணியின் கேப்டன் இவர்தான்…ரசிகர்கள் மகிழ்ச்சி

டெல்லி அணியின் கேப்டனா இந்திய அணியின் இளம் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் குஷி அடைந்துள்ளனர். அதுமட்டிமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய பொழுதுபோக்காக இது இருக்கும்.

இந்நிலையில்,  விரைவில் வரவுள்ள ஐபிஎல்-21 14வது சீசனில் பிசிசிஐ புதிய விதிகளை விதித்துள்ளது.

இம்முறை மிகவும் வித்தியாசமாக அதாவது சென்னை, பெங்களூர், அகமதாபாத், டெல்லி,மும்பை, கொல்கத்தா ஆகிய 6 மைதானங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த முறை டெல்லி அணி இறுதிபோட்டிக்குச் சென்றது.ஆனால் மும்பையிடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இம்முறை அணியை வழிநடத்திச் செல்வது யார்? அந்த அணியின் கேப்டன் யார் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு இன்று டெல்லி அணி நிர்வாகம் ஒரு பதிலை கூறியுள்ளது.

அதாவது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான் டெல்லி அணியின் கேப்டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.