செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜனவரி 2022 (10:46 IST)

தோனி எனக்கு எதுவும் சொல்லித்தரவில்லை… ஹர்திக் பாண்ட்யா!

இந்தியாவில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உருவாகி வந்தவர் ஹர்திக் பாண்ட்யா.

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் வேகப்பந்து வீச்சாளர் பேட்ஸ்மேனாக உருவாகி வந்தார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் அவுட் ஆஃப் பார்மில் இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் அகமதாபாத் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

தனது ஆரம்பகாலம் பற்றி பேசியுள்ள அவர் ‘நான் எல்லோரிடமும் கற்றுக்கொண்டேன். குறிப்பாக தோனியிடம் இருந்து. நான் அணிக்குள் சென்ற போது அவர் என்னிடம் எப்படி பந்துவீச வேண்டும் என்பது பற்றி எதுவுமே சொல்லவில்லை. அப்போது அது எனக்கு ஆச்சரயமாக இருந்தது. ஆனால் பின்னர் நான் என்னுடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் செய்தது என்று தெரிந்துகொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.