சேப்பாக்கம் என்றும் நம் பக்கம்.. சொல்வது உங்கள் தமிழ் புலவன்! – ஹர்பஜன் மகிழ்ச்சி ட்வீட்!
இந்தியா – இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா வென்றது குறித்து ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.
இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங் “சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம்தான். அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான். மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் காண்பது மகிழ்ச்சி தான். வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்!” என கூறியுள்ளார்.