Daily Horoscope
✕

கோலியை வம்பிழுத்த கம்பீர்… கொந்தளித்த ரசிகர்கள்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

Written By vinoth
Updated: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:23 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் பேசிய கர்த்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

ஆனால் இந்திய அணியின் விராட் கோலி குறித்து சமீபத்தில் இவர் தெரிவித்த கருத்து ரசிகர்களைக் கோபமடையச் செய்துள்ளது. கோலி பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக “உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அணிக்காக விளையாடி ரன்களை சேர்க்கவேண்டும். தங்கள் சொந்த சாதனைக்காக விளையாடக் கூடாது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோலி குறித்த கம்பீரின் இந்த கருத்துக்கு டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து கம்பீரை விமர்சித்து வருகின்றனர். 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments