வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (19:31 IST)

''கிரீன் சிட்டி நகர்'' விருது வென்ற ஐதராபாத் ...பிரபல நடிகர் பாராட்டு

vijaydevarakonda
உலக பசுமை நகர விருதுகள் 2022 என்ற விருதை ஐதராபாத்திற்கு கிடைத்துள்ளதற்கு பிரபல நடிகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தென் கொரொயா நாட்டில் ஜெஜூ என்ற நகரில் நடந்த தோட்டக்கலை உற்பத்தியாளர்களின் சர்வதேச சங்கம் விழா நடைபெற்றது. இதில், ஐதராபாத் சிட்டி 6 விருதுகள் வென்றுள்ளது.

இந்த விழாவின், இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நகரமான தெலுங்கானா மா நிலம் ஐதராபாத்,   அவுட்டர் ரிங் ரோடு, நகரைச் சுற்றியுள்ள பகுதியில் பசுமையை மேம்படுத்தியதற்கான மதிப்புமிக்க ஏஐ பிஹெச் குளோபல் விருதான வேர்ல்ட் க்ரீன் சிட்டி விருதுகளை ஐதரபாத் நகரம் பெற்றுள்ளது.

இதுகுறித்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜயதேவரகொண்டா, ‘’அடுத்த லெவல்….உலகின் எல்லா சிட்டிகளையும் தோற்கடித்து வென்றுள்ள ஐதராபாத்திற்கு  வாழ்த்துகள்’’ தெரிவித்துள்ளார்.

Edited by Sino