ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (07:16 IST)

இந்திய அணிக்கு அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார்?... கம்பீர் கொடுக்கும் அழுத்தம்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே அவர்தான் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் என்ற ஊகங்கள் எழுந்தன.

ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஆகிக்கொண்டே வந்தது. ஏன் அந்த தாமதம் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற ராகுல் டிராவிட்டுக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் பிசிசிஐ ஊதியமாகக் கொடுத்தது. இப்போது கம்பீர் அதைவிட அதிக சம்பளத்தைப் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்த தேர்வும் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் முன்னாள் இந்திய பவுலர்களான ஜாகீர் கான், லஷ்மிபதி பாலாஜி மற்றும் வினய் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூவரில் வினய் குமாரை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கவேண்டும் என தேர்வுக்குழுவுக்குக் கம்பீர் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.