வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 10 ஜூலை 2024 (07:44 IST)

140 கோடி இந்தியர்களைப் பெருமைபட வைக்க எனது ஆற்றலைப் பயன்படுத்துவேன் – புதிய பயிற்சியாளர் கம்பீர் நெகிழ்ச்சி!

140 கோடி இந்தியர்களைப் பெருமைபட வைக்க எனது ஆற்றலைப் பயன்படுத்துவேன் – புதிய பயிற்சியாளர் கம்பீர் நெகிழ்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக கடந்த சில மாதங்களாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை உள்ளிட்ட ஐந்து கோப்பைகளை வென்றுள்ள கம்பீரின் அணுகுமுறை இந்திய அணியை புதுப்பாதையில் பயணிக்கவைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கம்பீர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்தியா எனது அடையாளம், எனது நாட்டுக்காக சேவையாற்றுவது எனது முதல் தேர்வாக இருக்கும். இந்திய அணியில் புதிய பொறுப்பில் மீண்டும் இணைந்திருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனால் முன்பைப் போலவே எனது பொறுப்பு என்பது 140 கோடி இந்தியர்களையும் பெருமைப்படவைப்பதுதான்.அதற்காக எனது ஆற்றலைப் பயன்படுத்துவேன்” எனக் கூறியுள்ளார்.