ஒய்வு பெற்றார் உலகக்கோப்பை நாயகன்
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான கம்பீர் தந்து மிகச்சிறிய உருவத்தால் பெரிய ஷாட்களை அடிக்க இயலாது என்ற காரணத்தால் அணித்தேர்வில் இருந்து தொடர்ந்து ஒதுக்கப்பட்டார்.தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய கம்பீர் கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல்11-ம் தேதி டாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இடதுகைத் தொடக்க ஆட்டக்காரான கம்பீருக்கு சச்சிn சேவாக் இணைக் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் டெஸ்ட் போட்டியில் 2004-ம் ஆண்டு மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்பீர் அறிமுகமானார். டெஸ்ட் அணியில் சேவாக்குடன் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
கம்பீரைப் பொறுத்தவரை அவரை அதிகம் வெளியில் தெரியாத உலகக்கோப்பை நாயகன் எனலாம். இந்திய அணி 2007-ல் வெற்றி பெற்ற டி 20 உலகக்கோப்பையிலும் 2011-ல் வெற்றி பெற்ற 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியிலும் இறுதிப்போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராவர். ஆனால் 2 போட்டிகளிலுமே ஆட்டநாயகனாக தேர்வாகாதது அவரது துரச்திர்ஷ்டம்.
ஐபிஎல் போட்டிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடியுள்ள கம்பீர், கொல்கத்தா கேப்டனாக செயல்பட்டு 2 முறை அந்த அணிக்குக் கோப்பையை வென்றுத்தந்த பெருமைக்குரியவர்.
இதுவரை இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் அடங்கும். 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 5,238 ரன்கள் குவித்துள்ளார். இதில் 11 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும்.. 37 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 932 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 அரை சதங்கள் அடங்கும்.
இத்தகையப் பெருமைகளுக்குரிய கம்பீர் கடந்த இரண்டாண்டாக இந்திய அனியில் இடம் கிடைக்காமல் போராடி வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல்லில் அவர் விளையாடிய டெல்லி அணியும் அவரைக் கழட்டி விட்டுள்ளது. அதனால் அனைத்து விதமானப் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக கம்பீர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.